15ஆம் திகதியும் அரச விடுமுறை

sri lanka government எதிர்வரும் 15ஆம் திகதியான வெள்ளிக்கிழமை விசேட அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், சிங்கள புதுவருடத்தையிட்டு எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளான புதன் மற்றும் வியாழக்கிழமை அரசாங்க விடுமுறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை அடுத்து வரும் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு தினமும் விடுமுறை தினங்கள் என்பதால், புது வருடத்தை கொண்டாடும் மக்களின் வசதி கருதி அதற்கிடைப்பட்ட நாளான 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமையும் விடுமுறை வழங்குவதற்கு முடிவெடுத்துள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

பல்வேறு தரப்பினரும் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய, ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அங்கீகாரத்தின் அடிப்படையில் எதிர்வரும் 15ஆம் திகதி விசேட அரசாங்க விடுமுறையாக பிடகனப்படுத்தியுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.