18042024Thu
Last update:Mon, 04 Mar 2024

பெருந்தோட்ட மக்களுக்கு காணி உறுதிகளை வழங்க அமைச்சரவை அங்கீகாரம்

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உறுதிகளை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும், 200 வருடகாலமாக முகவரியின்றி வாழ்ந்து வந்த மக்களுக்கு 100 நாட்களில் 7 பேர்ச்சஸ் காணியை பெற்றுக் கொடுத்து அரசாங்கம் அவர்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வேலாயுதம் தெரிவித்தார்.


திருடர்களைப் பாதுகாப்பதற்கு பாராளுமன்றத்தை பயன்படுத்தாதீர்கள்

Wickremesinghe3பாராளுமன்றத்தை திருடர்களைப் பாதுகாக்கப் பயன்படுத்த வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சி எம்பிக்களிடம் நேற்றுக் கோரிக்கைவிடுத்தார். நாட்டில் மோசடி குறைந்துள்ளதால் பத்து வருடங்களின் பின் முதற் தடவையாக வாழ்க்கைச் செலவு குறைந்துள்ளதாகத் தெரிவித்த அவர், மோசடிகள் குறித்து விசாரணை நடத்த இடமளிக்கப் போவதில்லையென எதிர்க்கட்சி கோஷமிடுவதாகவும் தெரிவித்தார்.

20 ஆவது திருத்தம் வர்த்தமானியில் நாளை வெளியீடு

Peiris2

தேர்தல் மறுசீர மைப்புத் தொடர்பான
20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலம் இன்று அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப் பட்டு நாளை வர்த்தமானியில் வெளியிடப்படவிருப்பதாக ஜீ.எல்.பீரிஸ் எம்.பி தெரிவித்தார். இது தொடர்பாக அரசாங்கம் தங்களுக்கு அறிவித்திரு ப்பதாகக் குறிப்பிட்ட அவர், 19வது அரசியலமைப்புத் திருத்தச்சட்ட மூலத்தில் உள்ள பல அம்சங்கள் மாற்றப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

பதுளையில் 412 இடங்கள் மண் சரிவு அபாயம்

பதுளை மாவட்டத்தில் மண் சரிவுக்குள்ளாகும் 412 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருப்பதாக பதுளை மாவட்ட பிரதேச செயலாளர் நிமால் அபேசிங்க தெரிவித்தார்.

பதுளை மாவட்டத்தின் இயற்கை அனர்த்தங்கள் தொடர்பான விளக்கங்களை, பதுளை மாவட்ட பிரதேச செயலாளரிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

19ஆவது திருத்தம் குறித்து 27 , 28 விவாதம்

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் தொடர்பிலான விவாதத்தை எதிர்வரும் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

19ஆவது திருத்த சட்டமூலத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட திருத்தங்கள் தொடர்பில் அறிந்துகொள்வதற்கு காலஅவகாசம் தேவைப்படுவதாக எதிர்க்கட்சி கோரியதையடுத்தே, விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.